எபி : 4.15
நம்முடைய காரியங்களை ஒரு வேளை
யாரும் புரிந்து கொள்ளாமல் இருக்கலாம். நமக்கு உதவி செய்ய யாரும் இல்லையே என்று நாம் ஏக்கத்தோடு காணப்படலாம்.
ஆனால் நம்முடைய வாழ்வின் அனைத்துப் பகுதிகளையும் நன்கு அறிந்தவர் நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து. நாம் கடந்து செல்லும் கடினமான பாதையையும், நம்முடைய பெலவீனங்களையும் நன்கு அறிந்திருக்கிறார். ஆதலால் சோதிக்கப் படும் நமக்கு உதவி செய்ய வல்லவராயிருக்கிநார் .
நாம் செய்ய வேண்டிய ஒரே காரியம், தேவனுக்கு பிரியமாய் நம்முடைய வாழ்கையை மாற்றி அமைக்க வேண்டும். அவரை நேசிக்க வேண்டும். ஒரு குழந்தை தன்னை நேசிக்கும் தாய்க்கு கீழ்ப்படிகிறது போல, தேவனுடைய கற்பனைகளை நாம் அவர் மீது கொண்ட அன்பினால் கைக்கொள்ள வேண்டும்.
அப்படி செய்யும் போது, நமக்காக மனதுவுருகுகிற நம் தேவன் நமக்கு உதவி செய்வார். அவர் தம்முடைய குமாரனையே நமக்காக ஒப்புக் கொடுத்து நம்மில் முன்பு அன்புகூர்ந்தார். “இவைகளிலும் அதிகமாய் என்னை நேசிக்கிறாயா?” என்று கேட்கிற இயேசுவிடம் . “ஆம் ஆண்டவரே உம்மை அதிகமாக நேசிக்கிறேன்” என்று சொல்வோம். அவர் நம்மை இந்த உலகத்தில் வெற்றியோடு வாழ்ந்து தேவசித்தத்தை நிறைவேற்ற உதவி செய்வார்
Leave a Reply