விடுதலையாக்கும் சத்தியம்

பதில் பெறும் ஜெபம்

நம்முடைய உதவியற்ற சுழ்நிலையை உணர்ந்தவர்களாய் கர்த்தருடைய உதவியை நாடும் போது மெய்யாகவே அவர் நம்முடைய வாழ்வில் இடைப்பட்டு நம் ஜெபத்தைக் கேட்டு பதில் செய்வார். கெட்ட குமாரன் உவமையில், இளைய குமாரன் தான் தந்தையை விட்டு பிரிந்து சென்றதன் விளைவை உணர்ந்த போது அவன் புத்தி தெளிந்தது. தகப்பனும் அவனை தன் மகனாக ஏற்றுக் கொண்டார்(லூக்கா 15:11-32).

17 தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான், தேவனே, நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணியீர்.
சங்கீதம் 51:17

2 என்னுடைய கரம் இவைகளையெல்லாம் சிருஷ்டித்ததினால் இவைகளெல்லாம் உண்டாயின என்று கர்த்தர் சொல்லுகிறார், ஆனாலும் சிறுமைப்பட்டு, ஆவியில் நொறுங்குண்டு, என் வசனத்துக்கு நடுங்குகிறவனையே நோக்கிப்பார்ப்பேன்.

ஏசாயா 66

அதுபோல பழைய ஏற்பாட்டில் மனாசே என்ற ராஜாவைக் குறித்துப் பார்க்கிறோம். அவனும் தன்னை உணர்ந்து தேவனிடம் கெஞ்சின போது தான் இழந்து போன உயர் நிலையை திரும்பவும் பெற்றுக் கொண்டான். (2 நாளாகமம் : 33:1-13)

நம்முடைய ஜெபங்களிலும், வேண்டுதல்களிலும் இவ்வாறு செய்யும் போது ஜெபத்திற்கான பதிலை உடனே பெற்றுக்கொள்ளலாம்.

இப்படிப்பட்ட பாக்கியத்தை கர்த்தர் நமக்கும் தந்தருள்வார் ஆமேன்.

Leave a Reply

Discover more from Daily Devotions (Tamil )

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading