விடுதலையாக்கும் சத்தியம்

பெரிய பிரச்சனை பெரிய அற்புதம்

ஒவ்வொரு நாளும் நம் தேவைகளுக்கேட்ப அற்புதம் செய்து நம்மை நடத்துபவர் நம் ஆண்டவர். நம்முடைய பிரச்சனை பெரிதாக இருக்கலாம். ஒரு முறை சீஷர்கள் படகை செலுத்த முடியாத வண்ணம் கடலில் பெருங் காற்று எழும்பிற்று. அவர்கள் சோர்ந்துப் போனார்கள்.

அந்த இக்கட்டான நேரத்திலும் கடலின் மேல் நடந்து அவர்களிடம் வந்தார். சீஷர்களை மலைக்க வைத்த காற்றும் கடலும் இயேசுவை சேதப்படுத்த முடியவில்லை. நம்முடைய பெரிய பிரச்சனை இயேசுவுக்கு லேசானது.

தொல்லைகள் பெரிதாகிக் கொண்டு இருக்கிறதே என்று ஒரு வேளை கவலைப் படுகிறோமா?

வியாதியாயிருந்த யவிருவின் மகள் மரித்தே போய்விட்டாள். ஆனால் இயேசுவின் முன்பு வியாதியோ மரணமோ அவளை சேதப்படுத்த முடியவில்லை. நம்முடைய பிரச்சனைகளால் நம்மை சேதப்படுத்த முடியாது.

கர்த்தர் பெரியவர் இயேசு பெரியவர் இந்த பிரச்சனையை விட. பெரிய அற்புதங்கள் செய்து நம்மை நடத்துவார். அமேன்.

Leave a Reply

Discover more from Daily Devotions (Tamil )

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading