நம்முடைய வாழ்கையில் அநேகக் காரியங்களை தேடுகிறோம் . படிப்பு , வேலை , செல்வம் , சுகம் என்று பல. நாம் தேடுவது கிடைக்காத போது சோர்ந்து போகிறோம்.
இவைகள் அனைத்தும் நமக்கு தேவையானவை. ஆனால் நிலையற்றவை.
ஒரு முறை இயேசுவானவர் தன் சிஷர்களிடமும் சூழ நின்ற மக்களிடமும் தேவனுடைய இராஜியத்தையே தேடுங்கள் என்று கூறுகிறார் .
நிலையான தேவனுடைய இராஜியத்தையும் அதற்கு ஏற்றவைகளையும் எப்போதும் நாம் சிந்தித்துக் கொண்டிருந்தால் கவலைப்படத் தேவையே இல்லை. ஏனென்றால் அந்த இராஜியத்தின் சொந்தக்காரர் நம் தேவைகளைச் சந்திப்பார்.
இவைகளெல்லாம் கூடக் கொடுக்கப்படும் என்று தம் வேதத்தில் உறுதி அளித்திருக்கிறார்.
குறைவுகள் வரலாம் நிறைவுகளும் வரலாம், ஆனால் எந்த நேரத்திலும் தேவனைத் துதிப்பதை நிறுத்தக் கூடாது. எந்நேரத்திலும் அவரை ஸ்தோத்தரிக்க வேண்டும். அப்பொழுது புத்திக்கெட்டாத தேவ சமாதானம் நம்மை நிறப்பிவிடும்.
அன்பு, சாந்தம், பாவத்தை வெறுத்தல் உள்ளிட்ட தேவ நீதியையும் செய்வோமென்றால் இயேசுவின் வருகைக்கு அல்லது மறுமை வாழ்விற்கு எந்த நேரமும் ஆயத்தமுள்ளவர்களாய் நாம் வாழ முடியும்.
Leave a Reply