ஆதலால் நீ போ நான் உன் வாயோடே இருந்து நீ பேச வேண்டியதை உனக்குப் போதிப்பேன் என்றார். யாத்திராகமம் 4:12
பார்வோனிடத்தில் என்ன பேச வேண்டும். எப்படி பேச வேண்டும் என்று மோசேக்கு தெரியவில்லை. அந்த சமயத்தில் தேவன் 11-ம் வசனத்தை சுட்டிக் காட்டி மோசேயை அனுப்புவதை பார்க்கிறோம்.
அதே கர்த்தர் இன்றும் நம் ஒவ்வொருவருக்கும் கற்றுக்கொடுக்கிறவராகவே இருக்கிறார். யோவான் 7ம் அதிகாரத்திலே இயேசு அநேக காரியங்களைக் குறித்து பேசி கற்றுக்கொடுக்கிறார். கடைசி வசனத்திலே ஜனங்கள் வீட்டுக்குப் போனார்கள். யோவான் 8:1லே இயேசு ஒலிவமலைக்குப் போனார். என்று பார்க்கிறோம். 2ம் வசனத்திலே காலையிலே திரும்ப வந்து தேவாலயத்துக்குப் போய் உபதேசித்தார் என்று பார்க்கிறோம், பகல் முழுவதும் உபதேசம், இரவு முழுவதும் மலையிலே போய் பிதாவிடம் ஜெபம். அதனால் தான் இயேசு அதிகாரமுடையவராக போதிக்கிறவராக காணப்பட்டார்.
யோவான் 17:19ன் படி அவர் பரிசுத்தமானவராக இருந்ததால் அவருடைய போதனையினால் அநேகர் இரட்சிக்கப்பட்டனர். நாம் பரிசுத்தத்துடன் தேவனைத் தேடும்போது, அவர் நமக்கு அநேக காரியங்களை கற்றுக்கொடுக்கமுடியும். எனவே நம் வாழ்க்கையில் பரிசுத்தம் அவசியம். மாற்கு 10.1ன்படி அவருடைய வழக்கமே போதனை தான். அதாவது கற்றுக்கொடுத்தல் தான். நாமும் இயேசுவினிடத்தில் சேரும் போது நமக்கும் அவர் கற்றுக் கொடுக்கிறவராகவே இருக்கிறார்.
மேலும் பவுல் மனதார போதிக்க வேண்டும் என்று குறிப்பிடுகிறார். மாற்கு 6:31ன்படி இயேசு ஓய்வெடுக்க செல்ல நினைக்கையிலும், ஜனங்களுக்காக மனதார உபதேசித்தார். இயேசுவின் போதனையில் இன்று நீங்கள் கற்றுக்கொண்டது என்ன?
பரமபிதாவே, நாள்தோறும் உம்மிடத்தில் கற்றுக் கொள்ள உதவி செய்யும். ஆமென்.