அதற்கு தேவன் இருக்கிறவராக இருக்கிறேன் என்று மோசேயுடனே சொல்லி “இருக்கிறேன்” என்பவர் என்னை
உங்களிடத்துக்கு அனுப்பினார் என்று இஸ்ரவேல் புத்திரரோடே சொல்வாயாக என்றார். (யாத்திராகமம் 3:14)
வேதம் சொல்கிறது கர்த்தர், நேற்றும், இன்றும், என்றும் மாறாதவர். இதிலே நேற்று என்பது நேற்றைய நாளை மட்டுமல்ல நேற்றைக்கு முந்தின நாளையும் குறிக்கும். இன்று என்பது இன்றைய நாளையும், என்றும் என்பது நாளைய பொழுதையும், நாளை மறுதினத்தையும் குறிக்கும்.
நேற்றுக்கு முந்தின நாள் : எசே:28-14, நீதி: 8:30,31 வசனத்தின்படி உலகம் உண்டாவதற்கு முந்தின காலக்கட்டம்.
நேற்றைய நாள் :
ஏதேன் தோட்டம் முதல் கிறிஸ்து
பிறப்பு வரை உள்ள காலக் கட்டம்.
இன்றைய நாள்:
லூக்கா :2:11ன் படி உபத்திரவ
மற்றும் மகா உபத்திரவ காலக் கட்டம்
நாளைய நாள்:
ஆயிர வருட அரசாட்சி
நாளைய மறுநாள் :
நித்திய ஜீவனில் பிரவேசிப்பது.
நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராகிய நம் கர்த்தர் தாம் வாக்குப்பண்ணினதில் உண்மையுள்ளவர். அன்று மோசேக்கு முட்செடியிலே தரிசனமாகி இஸ்ரவேல் ஜனங்களிடத்தில் அவனை அனுப்பினவர். தன் ஜனங்களுக்கு சுதந்தரமாகக் கொடுப்பேன் என்று சொன்ன கானான் தேசத்திற்கு அவர்களை கொண்டு சேர்க்கிறவரையிலும் மோசேயோடு கூட இருந்து வழி நடத்தினார். இன்றும் அவர் மாறாதவராயிருந்து உங்களை நித்திய கானானுக்குள் பிரவேசிக்கச் செய்வார்.
பிரியமானவர்களே, வரலாற்றின் நாயகராம் தேவன் நம் முற்பிதாக்களோடு இருந்து பெரிய காரியங்களைச் செய்ததுபோல உங்கள் வாழ்விலும் அதே வல்லமையோடு இருந்து செயல்படவிரும்புகிறார். சோர்ந்து போகவேண்டாம்.
பரம தகப்பனே, என்றென்றும் எங்கள் வாழ்க்கை பாதையில் கரம் பிடித்து நடத்தும். ஆமென்.