தேவ பயம்- ஆசீர்வாதம்

தேவனுக்குப் பயந்ததினால் அவர்களுடைய குடும்பங்களை தழைக்கும்படி செய்தார். யாத்திராகமம் 1:21

நல்லமுறையில் வாழ்ந்து கொண்டிருந்த நாட்டு மக்களில், ஆண்கள் அனைவரும் திடீர் என தங்கள் மேல் சட்டையை அணியாமல் தங்கள் பணிகளில் ஈடுபட்டனர் காரணம் என்னவென்றால் அந்நாட்டு ராஜாவுக்கு முதுகில் கட்டி வந்துள்ளது. அதனால் சட்டை அணிய முடியவில்லை. “என்னால் சட்டை அணிய முடியவில்லை, ஆகவே என் நாட்டில் ஆண்கள் யாரும் மேல் சட்டை அணிய கூடாது என ராஜா கட்டளையிட்டுள்ளார்.

ராஜாவின் கட்டளை எதுவாக இருந்தாலும் அதை அப்படியே ஏற்று செயல்படுவது மக்களின் வழக்கம்.

எகிப்தில் இஸ்ரவேலர் பலுகி பெருகினர். யோசேப்பை அறியாத பார்வோன், இஸ்ரவேலர்களை துன்புறுத்த தொடங்கினான். அவர்களுக்கு கடினமான வேலைகளைக் கொடுத்தான். சிப்பிராள், பூவாள் என்ற மருத்துவச்சிகளை அழைத்து “நீங்கள் எபிரேய பெண்களுக்கு பிரசவம் பார்க்கும்போது ஆண்பிள்ளைகள் என்றால் கொலை செய்யுங்கள் என்றான். மருத்துவச்சிகள் கர்த்தருக்கு பயந்ததினால் ஆண்பிள்ளைகளை காப்பாற்றினார்கள். தங்களை ஆட்சி செய்கின்ற ராஜாவை காட்டிலும் கர்த்தரே மேலானவர் என மருத்துவச்சிகள் கருதி செயல்பட்டனர். கர்த்தருக்குப் பயப்படுகின்ற பயம் மருத்துவச்சிகளுக்கு இருந்ததினால், கர்த்தர் அவர்களையும் குடும்பத்தையும் அசீர்வதித்தார். அவர்கள்

ஆண்டவரின் பாதம் அமர்ந்து குடும்பமாக கேட்டு பெற்று கொள்வதுதான் குடும்ப ஆசீர்வாதம். நடுக்கத்துடனே கர்த்தரை சேவியுங்கள். இது சங்கீதக்காரனின் அனுபவம். எத்துன்பம் வரினும் இறைவனுக்கு சேவை என்பதே முக்கியம்.

இருந்தாலும் எதிர்மறையான சூழ்நிலையாக கர்த்தருக்கு பயந்து அவருக்கு பிரியமான காரியங்களை செய்யும்போது, கர்த்தர் நம்மையும் நம் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பார்.

உலக வாழ்க்கையின் போராட்டத்திலே உமக்கு பயந்து நடந்திட அருள்தாரும்.