‘மனுஷருக்கு நேரிடுகிற சோதனையேயல்லாமல் வேறே சோதனை உங்களுக்கு நேரிடவில்லை. தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார்; உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையைத் தாங்கத்தக்கதாக. சோதனையோடுகூட அதற்குத் தப்பித்துக்கொள்ளும் படியான போக்கையும் உண்டாக்குவார்’
1 கொரி. 10:13
என்னுடைய வேதப்புத்தகத்தில் அடிக்கோடு போட்டு. பக்கத்தில் எனது கையெழுத்தையும் போட்டு வைத்திருக் கும் வசனம் இது.
பாரங்கள். பிரச்சினைகள், பாதிக்கப்படும் வேளைகளில் பலத்த விசுவாசத்திற்குள் இவ்வசனம் என்னை நடத்துகிறது.
மேற்கண்ட வசனத்தில் மூன்று உண்மைகள் :
1 திராணிக்கு மிஞ்சிய சோதனை எனக்கு இல்லை:
2 தாங்கத்தக்கதான பெலனைத் தேவன் தருகிறார்.
3 தப்பித்துக் கொள்ளும் படியான போக்கையும் உண்டாக்குகிறார்.
கடலைப்பிளந்த கர்த்தர்,கன்மலையைப் பிளந்த தெய்வம், யோர்தானைப் பிளந்த யகோவா எனது இன்றைய பிரச்சனைக்கு வழி வகுப்பார் என்பது எத்தனை உறுதி? என் மனமே, கலங்காதே! இயேசு உனக்கு வழிவகுக்கப் போகிறார்; நிச்சயமாகவே முடிவு உண்டு; உன் நம்பிக்கை வீண் போகாது.
ஜெபம்: என் பாவம் போக்கும் ஜீவ நதியே, என் பாரம் போக்க உம்மால் கூடுமே. இயேசுவே. என் பிரச்சினைக்கு வழி வகுப்பீராக. ஆமென்.
Extract from Daily with the Lord