Questions in Tamil
- அன்று சாயங்காலத்தில், இயேசு தம் சீடர்களிடம் என்ன சொன்னார்? (மாற்கு 4:35)
- சீவர்கள் யாரை அனுப்பிவிட்டார்கள்? (மாற்கு 4:36)
- இயேசுவும் அவருடைய சீடர்களும் கடலைக் கடக்கும்போது என்ன நடந்தது? (மாற்கு 4:37)
- பலத்த சுழல்காற்று உண்டான போது இயேசு என்ன செய்து கொண்டிருந்தார்? (மாற்கு 4:38)
- சீடர்கள் இயேசுவிடம் என்ன சொன்னார்கள்? (மாற்கு 4:38)
- இயேசு எவ்வாறு சீஷர்களை ஆபத்திலிருந்து காப்பாற்றினார்? அவர் என்ன சொன்னார்? (மாற்கு 4:39)
- புயல் நின்ற பிறகு, இயேசு தம் சீடர்களிடம் என்ன கேட்டார்? (மாற்கு 4:40)
- அவர்கள் ஒருவருக்கொருவர் என்ன சொல்லிக்கொண்டார்கள்? (மாற்கு 4:41)
- திரளான ஜனங்கள் இயேசுவை ஏன் பலவந்தமாகப் பிடிக்க விரும்பினார்கள்? (யோவான் 6:15)
- இயேசு தம்முடைய சீஷர்களை என்ன செய்யும்படி துரிதப்படுத்தினார் ? (மத். 14:22)
- இயேசு ஏன் மலையில் ஏறினார் ? (மத். 14:23)
- சீஷர்கள் எப்போது படகில் ஏறினார்கள்? அவர்கள் எந்த ஊரை நோக்கிச் சென்றார்கள்? (யோவான் 6:16-17)
- காற்று எப்படி இருந்தது? (மத். 14:24)
- சீஷர்கள் எவ்வளவு தூரம் படகில் சென்றார்கள்? (யோவான் 6:19)
- இயேசு எப்போது சீஷர்களிடம் வந்தார்? (மத். 14:25)
- இயேசு கடலில் நடப்பதைக் கண்ட சீடர்களின் ஏன் அலறினார்கள் ? (மத். 14:26)
- இயேசு அவர்களிடம் என்ன சொன்னார்? (மத். 14:27)
- பேதுரு இயேசுவிடம் என்ன கேட்டார்? இயேசுவின் பதில் என்ன? (மத். 14:28-29)
- பேதுரு இயேசுவிடம் சென்றபோது என்ன நடந்தது? (மத். 14:29-30)
- இயேசு என்ன செய்தார், என்ன சொன்னார்? (மத். 14:31)
- இயேசுவும் பேதுருவும் படகில் ஏறிய பிறகு, என்ன நடந்தது? (மத். 14:32) படகு எங்க போய் சேர்ந்தது? (யோவான் 6:21)
- சீடர்கள் இயேசுவை ஏன் பணிந்துக்கொண்டார்கள் ? (மத். 14:33)