
மனுஷனுடைய இருதயத்தின் நினைவுகள் அவன் சிறுவயது தொடங்கிப் பொல்லததாயிருக்கிறது.
ஆதி 6:5
என் மகனே, நீ உன் செவியை ஞானத்திற்குச் சாய்த்து உன் இருதயத்தைப் புத்திக்கு அமையப்பண்ணும் பொருட்டு, நீ என் வார்த்தைகளை ஏற்றுக் கொண்டு, என் கட்டளைகளை உன்னிடத்தில் பத்திரப்படுத்தி,ஞானத்தை வா என்று கூப்பிட்டு புத்தியை சத்தமிட்டு அழைத்து, அதை வெள்ளியைப்போல் நாடி, புதையல்களைத் தேடுகிறதுப் போல் தேடுவாயாக. அப்போது கர்த்தருக்குப் பயப்படுதல் இன்னதென்று நீ உணர்ந்து தேவனை அறியும் அறிவைக் கண்டடைவாய்.நீதி 2:3,4,5
ஞானம் உன் இருதயத்தில் பிரவேசித்து அறிவு உன் ஆத்துமாவுக்கு இன்பமாயிருக்கும் போது நல்யோசனை உன்னைக் காப்பாற்றும், புத்தி உன்னைப் பாதுகாக்கும். தேவ பிரசன்னம் அவர் சமூகம் உன்னை வழி நடத்தும்.
அதினால் நீ துன்மார்க்கனுடைய வழிக்கும், மாறுபாடு பேசுகிற மனுஷனுக்கும், அந்தகார வழிகளில் நடக்க நீதி நெறிகளை விட்டு, தீமை செய்ய மகிழ்ந்து, துன்மார்க்கருடைய மாறுபாடுகளில் களிகூறுகிறவர்களுக்கும் மாறுபாடான பாதைகளிலும். கோணலான வழிகளிலும் நடக்கிறவர்களுக்கும் நீ தப்புவிக்கப்படுவாய். நீதி 2:12 – 15
அவரே தேவனால் நமக்கு ஞானமும் நீதியும் பரிசுத்தமும் மீட்புமானார்.
1 கொரிந்தியர் 1:31
இயேசுவே என் இருதயத்துக்குள் வாரும் என்று அழைப்பாயா?
Leave a Reply