
தானியேல் தன் வாழ்வில் தேவனுக்கு முதலிடம் கொடுத்தார்.
தானியேலும் அவரது நண்பர்களும் பாபிலோனியர்களால் சிறைபிடிக்கப்பட்டனர், ஆனால் அவர்கள் அடிமைகளாக இருந்த போதும் தங்கள் தனித்துவத்தையும் கர்த்தருக்கான அர்ப்பணிப்பையும் சமரசம் செய்ய வேண்டாம் என்று மீண்டும் மீண்டும் தீர்மானம் செய்தனர். பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ளபடி தானியேல் மற்றும் நண்பர்களின் மூன்று தீர்மானங்கள் , “ராஜ உணவு மற்றும் மதுவால் தன்னைத் தீட்டுப்படுத்த வேண்டாம் என்று தீர்மானித்தனர்” (தானியேல் 1:8). இன்னும் தீவிரமாக, 3 ஆம் அதிகாரத்தில் உள்ள தங்கச் சிலையை வணங்க வேண்டாம் என்று தீர்மானித்தனர், 6 ஆம் அதிகாரத்தில் தானியேல் தனது தேவனிடம் தொடர்ந்து ஜெபிப்பதற்காக சிங்கத்தின் குகையில் வீசப்படும் சூழல் வந்த போதும் தொடந்து தேவனை நோக்கி மூன்று வேளை ஜெபிக்க தீர்மானம் செய்கிறார்.
இயேசுவுக்காக, பரிசுத்த வாழ்விற்காக நாம் எடுத்த தீர்மானங்கள் என்ன? சிந்தித்துப் பார்ப்போம்.
அவர்கள் எடுத்த தீர்மானத்தில் உறுதியாய் இருந்ததினால் தேவன் அவர்களை ஆசீர்வதித்தார்.
நம்மைச் சுற்றியுள்ள உலகின் பாவ சோதனைகளைப் பொருட்படுத்தாமல், நம் வாழ்க்கையில் எப்போதும் இயேசுவுக்கு முதலிடம் கொடுத்து, சிலுவை நாதரை நேசித்து அவருக்கு நம் வாழ்வை அர்ப்பணிப்போம், பரிசுத்தமாய் வாழ்வோம். இயேசு உங்களுக்கு உதவி செய்வார்.
சிங்கத்தின் கெபியில் தானியேலோடு இருந்த தேவன். எப்பேர்ப்பட்ட ஆபத்துக்களிலும் உங்களோடு இருக்கிறார் என்பதை மறக்க வேண்டாம். அவர் நம்மை நிச்சயம் உலகின் அகத்தங்களிலிருந்தும், பிசாசின் கண்ணிகளிலிருந்தும் தப்பிவிப்பார்.
Leave a Reply