பாவ பாரம் விலகும்

1. கர்த்தர் நம்முடைய வெற்றி வாழ்விற்குத் தடையாக இருந்த் பாவங்களை நீக்குகிறார்.

உன் மீறுதல்களை மேகத்தைப்போலவும், உன் பாவங்களைக் கார்மேகத்தைப்போலவும் அகற்றிவிட்டேன், என்னிடத்தில் திரும்பு, உன்னை நான் மீட்டுக்கொண்டேன்.
ஏசாயா 44:22

2. கர்த்தர் நம் பாவங்களை நம்மை விட்டுத் தூரமாக்குகிறார்.

மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரமாய் அவர் நம்முடைய பாவங்களை நம்மை விட்டு விலக்கினார்.
சங்கீதம் 103:12

3. கர்த்தர் நம்மேல் பாவத்தின் வலிமையை இழக்கச் செய்கிறார்

அவர் திரும்ப நம்மேல் இரங்குவார். நம்முடைய அக்கிரமங்களை அடக்கி……
மீகா 7:19

4. கர்த்தர் நம் பாவங்களை தம் பார்வையிலிருந்து நீக்குகிறார்.

….என் பாவங்களையெல்லாம் உமது முதுகுக்குப் பின்னாக எறிந்துவிட்டீர்.
ஏசாயா 38:17

5. கர்த்தர் நம் பாவங்களை தம் மனதிலிருந்து நீக்குகிறார்.

….நான் அவர்கள் அக்கிரமத்தை மன்னித்து, அவர்கள் பாவங்களை இனி நினையாதிருப்பேன்.
எரேமியா 31:34

6. கர்த்தர் நம் பாவத்திற்கான தண்டனையை ரத்து செய்கிறார்.

நான், நானே உன் மீறுதல்களை என் நிமித்தமாகவே குலைத்துப்போடுகிறேன், உன் பாவங்களை நினையாமலும் இருப்பேன்.
ஏசாயா 43:25

7. கர்த்தர் பாவத்தின் கறையை நம்மை விட்டு நீக்கி, நம்மை தூய்மையாக்குகிறார்..

வழக்காடுவோம் வாருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார், உங்கள் பாவங்கள் சிவேரென்றிருந்தாலும் உறைந்த மழையைப்போல் வெண்மையாகும், அவைகள் இரத்தாம்பரச்சிவப்பாயிருந்தாலும் பஞ்சைப்போலாகும்.
ஏசாயா 1:18

8. கர்த்தர் நம் பாவங்களை மறதியின் கடலில் புதைக்கிறார்

…… நம்முடைய பாவங்களையெல்லாம் சமுத்திரத்தின் ஆழங்களில் போட்டுவிடுவார்.
மீகா 7:19

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *